ஈரோடு மாவட்டம் திருவாச்சி பகுதியில் நடைபெற்றுவரும் நீர் ஏற்று குடிநீர் திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு அமைக்கபட்டிருந்த அவினாசி அத்திக்கடவு குடிநீர் புகைப்பட கண்காணிட்சியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கூறியதாவது, "ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறலாம். 32 பெதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 370 குளம், குட்டைகள் நிரம்பி குடிமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இந்தத் திட்டம் ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிவடையும்" என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 'அன்பு அண்ணனின் பெயரை உச்சாரிக்காதீர்கள் முதலமைச்சரே' - உதயநிதி ஸ்டாலின் காட்டம்