ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள் உள்ளன. தற்போது பொது ஊடரங்கு காரணமாக திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் குறைவாக செல்வதால், வனவிலங்குகள் சாலையில் நடமாடும் சூழல் உள்ளது. மேலும் வாகனங்களின் இரைச்சல் இன்றி இயற்கையான சூழல் நிலவுவதால், சிறுத்தைகள் அடிக்கடி திம்பம் மலைப்பாதையை கடந்து செல்கின்றன.
இந்நிலையில், கோவையில் இருந்து மைசூருக்கு காரில் சென்று கொண்டிருந்த இருவர், திம்பம் 24ஆவது வளைவில் திரும்பும்போது தடுப்புச்சுவரில் கம்பீரமாக அமர்ந்திருந்த சிறுத்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நீண்ட நேரமாக அமர்ந்திருந்த சிறுத்தை, அதே இடத்தில் படுத்துக் கொண்டது. இதையறிந்து வனத்துறையினர் பண்ணாரி சோதனைச்சாவடியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரித்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: