ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் மௌலிரஞ்சித் செல்போனில் தொடர்புகொண்டு, தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார்.
அதற்கு சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார். உடனே அந்த இளைஞர், சிறுமியின் புகைப்படத்தை ஆபாச இணைய தளங்களில் வெளியிட்டு விடுவதாகக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சிறுமியை மிரட்டிய இளைஞர் மௌலிரஞ்சித், அவரது நண்பர்கள் தௌபிக், தன்சீல் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், தௌபிக், தன்சீல் ஆகியோர் வேலை பார்த்த கடைக்கு ரீசார்ஜ் செய்வதற்காக அந்தச் சிறுமி வந்து சென்றுள்ளார். இதையடுத்து, சிறுமியின் செல்போன் எண்ணை மௌலிரஞ்சித்திற்கு அவரது நண்பர்கள் கொடுத்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பெட்ரோல் போட வந்த இடத்தில் தகராறு - போதை கும்பல் கைது