ETV Bharat / state

கரோனா: அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நெசவுத் தொழில் - ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி

கரோனா தாக்கம் காரணமாக, வடமாநில வியாபாரிகள் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் துணிகளை வாங்க வராததால் இரண்டாயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளன எனத் தமிழ்நாடு விசைத்தறிச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.அது குறித்த சிறப்புத் தொகுப்பு.

the-weaving-industry-is-in-dire-straits
the-weaving-industry-is-in-dire-straits
author img

By

Published : Aug 2, 2021, 8:53 AM IST

Updated : Aug 3, 2021, 6:09 AM IST

ஈரோடு: நாடு முழுவதும் வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக இருக்கும், ஆடை நெசவுத் தொழிலில் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்புகளை ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் ஏற்று பாதுகாக்க வேண்டும் எனத் தமழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சுரேஷ் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ”தமிழ்நாடு சுற்றுப்பகுதியில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இதில், 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் விசைத்தறிகளில் தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்கின்றனர்.

கரோனா ஊரடங்கால் பொது நிகழ்ச்சிகள், திருமணம், கோயில் விழா என அனைத்துக்கும் தடைவிதித்துள்ளதாலும், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி சார்ந்த நிறுவனங்கள் திறக்கப்படாததாலும், மக்களின் துணி தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.

துணிகள் தேக்கம்

இதனால், நாங்கள் உற்பத்தி செய்யும் துணிகள் பெரிய அளவில் தேக்கம் அடைந்துள்ளன. மிகுந்த இழப்பை ஏற்படுத்துவதால், ஒரு மாதத்தில், 15 நாள்கள் மட்டுமே உற்பத்தியைத் தொடர்கிறோம். அதுவும், எங்களை நம்பி உள்ள விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், இயக்கிவருகிறோம்.

மாநில அளவில் தினமும், ஆறு கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும். இந்நிலையில் வடமாநிலங்களில் ஏற்பட்ட கரோனா தாக்கம் காரணமாக, வடமாநில வியாபாரிகள் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் துணிகளை வாங்க வராததால், தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறிகளில் உற்பத்தியான 60 கோடி மீட்டர் துணிகள் தேக்கமடைந்து இரண்டாயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

திடீர் நூல் விலையேற்றம்

கரோனா காலத்தில் இதுபோன்ற சூழலால் தற்போது தமிழ்நாடு முழுவதும் 40 விழுக்காடு விசைத்தறிகள், அதாவது மூன்று லட்சம் விசைத்தறிகள் விசைத்தறி இயக்கம் நிறுத்தம், திடீர் நுால் விலையேற்றத்தால் தொழில் பாதிப்பு எனப் பல காரணங்களால் பலர் இத்தொழிலைக் கைவிட்டு, ஒரு லட்சம் தறிகளுக்கு மேல் உடைக்கப்பட்டு இருப்பு கடையில் எடைக்கு போட்டுள்ளனர்.

இந்தத் தொழிலை நம்பி நேரடியாக, பத்து லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக 20 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் இடர் உள்ளதால் ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் விசைத்தறி தொழிலைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவர் சந்தைபோல, ஜவுளி உற்பத்தியாளர்களின் நேரடி சந்தையை மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும். அங்கு இடைத்தரகர்கள் தவிர்த்து, அதில் கிடைக்கும் லாபம் விசைத்தறியாளர்களுக்கு நேரடியாக கிடைத்தால், தொழில் மேம்படும். ஒவ்வொரு குறிப்பிட்ட மாவட்டத்தில் சேலை, வேட்டி, துண்டு, லுங்கி எனப் பலவற்றை உற்பத்தி செய்தும், அதனை மதிப்பு கூட்டிய ஆடைகளாகவும் விற்கின்றனர். அவற்றை நாங்களே வாங்கி பிற பகுதியில் விற்கும்போது, கூடுதல் லாபம் பெற முடியும்.

அரசுக்கு கோரிக்கை

துணிக்கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பதைத் தவிர்த்து, குறைந்த விலையில் நாங்களே விற்பதால், மக்களும் திருப்தி அடைவார்கள். பல காரணங்களால் தற்போது காடாத்துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி, பிளீச்சிங், டையிங், பிரிண்டிங் என செய்து மீண்டும் இங்கு கொண்டுவந்து விற்பதால், மீட்டருக்கு, 35 ரூபாய் கூடுதலாகிறது. அதை இங்கேயே செய்ய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும்.

விசைத்தறிச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சுரேஷ்

மக்களுக்கு குறைந்த விலையில் துணிகள் கிடைப்பதுடன், விசைத்தறியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதனைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தித் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியர்

Last Updated : Aug 3, 2021, 6:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.