ETV Bharat / state

மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூல் - கடைக்காரரிடம் மல்லுக்கட்டிய மது பிரியர்! வீடியோ வைரல்! - minister muthusamy

Tasmac Extra Amount Issue : டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மது பிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tasmac
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூல்
author img

By

Published : Aug 12, 2023, 7:44 PM IST

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூல்

ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டி தில்லை நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு மதுபிரியர் ஒருவர் மது வாங்க சென்று உள்ளார். 130 ரூபாய் விலை உள்ள இரண்டு மதுபான பாட்டிலை வாங்கி உள்ளார். பணியில் இருந்த விற்பனையாளர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டுள்ளார்.

எதற்கு கூடுதலாக, கேட்கிறீர்கள் என மதுபிரியர் கேட்டதற்கு இப்போதெல்லாம் ஐந்து ரூபாய்க்கு மேல் நாங்கள் அதிகமாக பணம் வாங்குவதில்லை என விற்பனையாளர் கூறி உள்ளார். மேலும், கூடுதலாக பணம் வாங்க வேண்டாம் என அமைச்சர் கூறியுள்ளாரா? என கேட்டதற்கு, வீடியோ எடுத்து அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கொள் என கடை ஊழியர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், கூடுதலாக பணம் யார் வாங்க சொன்னது? என மதுபிரியர் கேட்டதற்கு, கடை உரிமையாளருக்கு வாடகை கட்டுவதற்கு நாங்கள் தான் கூடுதலாக வசூல் செய்கிறோம். இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள் எனவும், அதிகாரிகள் என்னிடம் கேட்டால் நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என விற்பனையாளர் கூறியுள்ளார்.

மேலும், விற்பனையாளரின் பெயரைக் கேட்டதற்கு பெயர் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிவிட்டு, பின்னர் என் பெயர் நடராஜ் எனக் கூறுகிறார். இது குறித்து மதுபிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மதுபிரியர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த விற்பனையாளரின் பெயர் மணியன் எனவும் வீடியோவில் அவரது பெயரை மாற்றி கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் முத்துசாமி மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படும் என்றும், மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் மதுக்கடைகளில் வியாபாரம் அதிகமானால் அரசுக்கு பெருமை இல்லை, அவை குறைய வேண்டுமென நினைக்கிறோம் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி கொடுத்து தன்னம்பிக்கையூட்டும் புகைப்பட கலைஞர் - பொதுமக்கள் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.