ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்திலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து இன்று அதிகாலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கான 200க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை லாரியொன்றில் ஏற்றிக் கொண்டு, லாரி ஓட்டுநர் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஓட்டுநர் தனது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் திணறியபடி ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். லாரி ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள நியூ டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநர் கண்ணயர்ந்து போக, அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது ஏறியது.
ஓட்டுநர் தூங்கியதால் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதல்! - மின்கம்பத்தில் மோதிய சிலிண்டர் லாரி
ஈரோடு: சிலிண்டரை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் தூங்கியதால் லாரி மின்கம்பத்தில் மோதியது.