ஈரோடு, மாவட்டம் மொடக்குறிச்சி அண்ணமார் நகரில் அரசுப் பள்ளியில் ஆசிரியை ஸ்ரீஜா பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தடயங்கள் தெரியாமல் இருக்க கேஸ் சிலிண்டரை திறந்து பற்ற வைக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் இதே போல் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்தனர்.
இதனிடையே ஆசிரியை வீடு திரும்பிய பிறகே கொள்ளை போன பொருட்களின் மதிப்பு தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொடரும் ஆன்லைன் லோன் மோசடி- நூதன முறையில் மிரட்டிய வடமாநில கும்பல்