கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பரபரப்புடன் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ஆள் நடமாட்டம் இல்லாததால், வயல்வெளிகளில் இறைகளைத் தேடி சுற்றித் திரியும் மயில்கள், கூட்டம் கூட்டமாக அறச்சலூர், பூந்துறை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பரபரப்பான சாலைப் பகுதியில் உலா வருவதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
10க்கும் மேற்பட்ட மயில்கள் கடைகளின் மாடியில் நீண்ட நெடும் நேரமாக அங்கு சிந்திக் கிடக்கும் தானியங்களை சேகரித்தபடி சுற்றிக்கொண்டிருந்தன. சாலைகளில் செல்லும் வாகனங்களின் சத்தங்களைக் கேட்டதும் மயில்கள் பறந்து மீண்டும் வயல்வெளிகளுக்குச் செல்லத் தொடங்கின.
இதையும் படிங்க: வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் - அரசு தகவல்