ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்த ஒற்றை யானை...அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை ஒன்று வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

வாகனங்களை மறித்த ஒற்றை யானை
வாகனங்களை மறித்த ஒற்றை யானைவாகனங்களை மறித்த ஒற்றை யானை
author img

By

Published : Mar 18, 2021, 2:34 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக அதிகமாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவனம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காட்டு யானைகள் ஆசனூர் அருகே சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சுற்றித்திரிவதோடு, அவ்வப்போது பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்கின்றன.

வாகனங்களை மறித்த ஒற்றை யானை

இந்நிலையில் ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்ததோடு, சாலையின் நடுவே காட்டுயானை சிறிது நேரம் நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு வாகனங்களை நிறுத்தினர். யானை சிறிது நேரம் நகராமல் நின்றதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் புறப்பட்டுச் சென்றனர்.

யானை சாலையில் நின்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் யானை நடமாடுவதால் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: 100 விழுக்காடு வாக்குப்பதிவு: நகராட்சி சார்பில் ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.