ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஆசிரியர் நகர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சரின் விரிவான ஆலோசனைக்கு பிறகே அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது.
கரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கபட்டது. அப்போது உள்ள நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு. தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரி அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதால் 7.5 இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
முன்னதாக 9 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை பணிகளுக்கான பூமி பூஜை, புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பூமி பூஜை, பயனாளிகளுக்கு மாடு, ஆடு வளர்க்க கொட்டகை அமைக்க ஆணை வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? - ஆர்.எஸ்.பாரதி கலாய்!