ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் மண்டபத்தில் கௌதமன் - சௌந்தர்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. முதுகலை பட்டப்படிப்பு முடித்த இந்த திருமண தம்பதி, பழமையை நினைவுகூரும் விதமாகவும், பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாகவும், திருமண மண்டபத்திலிருந்து மணமகன் வீடு வெள்ளாளபாளையம் வரை மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
இருவரும் பட்டம் படித்து வேலைக்காக நகர்புறத்தில் வளர்ந்தாலும், பெற்றோர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போல் ஒருநாள் மாட்டுவண்டியில் பயணிக்க விருப்பப்பட்டனர். அதன்படி, 10 கிலோமீட்டர் தூரம் மாட்டுவண்டியில் பயணித்தனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த மக்கள் அவர்களுடன் செல்பி எடுத்து சென்றனர்.
இதுகுறித்து திருமண தம்பதி கூறுகையில், "எங்களது இரு குடும்பங்களும் விவசாயம் சார்ந்த குடும்பங்கள் என்பதால் வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் நினைவுகூர வேண்டும் என்ற எண்ணத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டோம். திருமணத்தில் நடந்த புது அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என மகிழ்ச்சியுடன்" தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் சூடுபிடிக்கும் தங்கத்தின் தேவை: ஐ.சி.ஆர்.ஏ.