ஈரோடு:16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார், அவரது இரண்டாவது கணவர், புரோக்கர் மாலதி மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நான்கு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மருத்துவ இணை இயக்குநர் பிரம்மகுமாரி தலைமையில் மதியம் 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை நடைபெற்றன. சுமார் 16 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் எடுத்து சென்றனர்.
மேலும் 4 அறைகளில் உள்ள 10 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தனர். 16 மணி நேரம் ஆவணங்களை சரிபார்த்து சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் 15 நாட்களில் நோயாளிகளை அப்புறப்படுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேம்மகுமாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு கூடுதல் கட்டடங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!