ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்காரணமாக 94 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 22ஆம் தேதி 102 அடியை எட்டியது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாய பாசனத்திற்கு அணை திறப்பு...!