ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் நேற்று (மே 7) வீசிய சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், சோளகர் தொட்டியில் வீசிய சூறைக்காற்றால் பட்டுப்புழு வளர்ப்புக் கிடங்குகளில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்கள் மீது அதன் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்ததால், கௌரி, கிட்டம்மா, தாயம்மா, பேபி, கடம்பூர் தாயம்மாள் ஆகியோர் காயமடைந்தனர்.
இதேபோல் தொட்டமுதுகரையைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் செல்போனில் பேசும்போது மின்னல் தாக்கியதில் காயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.