ETV Bharat / state

சாணியடி திருவிழா: ஆர்வமுடன் கலந்துகொண்ட பக்தர்கள் - தளவாடி சாணியடி திருவிழா

ஈரோடு: சாணியடி திருவிழாவில் பக்தர்கள் விளையாடிய சாணத்தை விளைநிலங்களில் உரமாக இட்டால் பயிர்கள் நன்றாக வளரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

festival
festival
author img

By

Published : Nov 17, 2020, 7:04 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை அடுத்துவரும் மூன்றாவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டுக்கான விழா இன்று (நவம்பர் 17) காலையில் சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணமும் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்துவைக்கப்பட்டது.

இந்தத் திருவிழா குறித்து மக்கள் கூறியதாவது, "சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணம் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார்.

இவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பைமேட்டின் மீதேறிச்செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. உடனே இதைக்கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரியவந்தது.

அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து மூன்றாவது நாள் சாணத்திலிருந்து தான் மீண்டெழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து மூதாதையர் வழிகாட்டுதல்படி இந்த விழாவை கொண்டாடிவருகிறோம்" எனத் தெரிவித்துள்னர்.

ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமிவை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். ஊர்தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.

ஆண்கள் கோயிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கோயில் பின்புரம் குவித்து வைக்கபட்டு உள்ள சாணத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனர்.

இதில் பங்கேற்ற பக்தர்கள், ஒருவருக்கொருவர் மீது சாணத்தை வீசி மகிழ்ந்தனர். இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை பெண்கள், ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகபடித்தி ரசித்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்கள் விளையாடிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் இட்டனர். இதனால் தங்கள் விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக இருக்கும் என்று கூறினர்.

இந்த திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாடு - கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடடுவார்கள் கரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு தமிழ்நாடு பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.