ETV Bharat / state

எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்! - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Jan 4, 2023, 4:49 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமுகன் ஈவெரா(46) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் - ஈ.வெ.ரா. திருமகன் அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் அனைவருக்கும் கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஈ.வெ.ரா.திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

    1/2 pic.twitter.com/trxvKXsIa2

    — CMOTamilNadu (@CMOTamilnadu) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எடப்பாடி பழனிசாமி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.E.V.K.S இளங்கோவன் அவர்களது மகனுமாகிய திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மகனை இழந்து வாடும் இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈவெரா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.E.V.K.S இளங்கோவன் அவர்களது மகனுமாகிய
    திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். 1/2 pic.twitter.com/IBJdX16v0J

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாமக நிறுவனர் ராமதாஸ்: தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது. திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது.(1/2)

    — Dr S RAMADOSS (@drramadoss) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வானதி சீனிவாசன்- கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமன திரு. திருமகன் ஈவெரா அவர்கள், 46 வயதில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும்போது, அவருடன் பலமுறை உரையாடியிருக்கிறேன். கட்சி வேறு, சித்தாந்தம் வேறு என்றாலும் சகோதர பாசத்துடன் பழகியவர். மகனை இழந்துள்ள திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. பெரும் இழப்பை சந்தித்துள்ள ஈ.வி.கே.எஸ். குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்: தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அரசியலில் வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் வயதிலேயே திருமகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். (1/2) @EVKSElangovan

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.