ETV Bharat / state

வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் வரவேற்பு

ஈரோடு: வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது உரையில் தெரிவித்ததை வரவேற்பதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தெய்வசிகாமணி

author img

By

Published : Jun 22, 2021, 7:43 AM IST

தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜுன்.21) கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

ஆளுநர் உரை

சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதில், வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் தனி நிதி நிலை அறிக்கை சமர்பிக்கப்போவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணியிடம் பேசினோம்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை சமர்ப்பிப்பதை வரவேற்கிறோம். இது விவசாயிகள் நீண்ட காலமாக முன்வைத்த கோரிக்கை. எந்த ஆட்சியிலும் ஏற்படுத்தாமல், தற்போது அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தனி பட்ஜெட் போட்டால், வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிய வரும்.

உழவர் சந்தை

விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருளை இடைத்தரகரின்றி, நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய உழவர் சந்தை பேருதவியாக இருந்தது.

அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதுடன், பல்வேறு இடங்களில் புதிதாக நிறுவுவது, விவசாயிகளுக்கு அதிக பயன் கொடுக்கும். லாபகரமான விலையை, உழவர் சந்தையால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, அதனை வலுப்படுத்த வேண்டும்.

வேளாண் சட்டங்கள்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைக்காக தான் டெல்லியில் விவசாயிகள் போராடி கொண்டிருக்கின்றனர். இச்சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்பதே திருப்தியளிக்கும் ஒன்றாகும்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி பேட்டி

வங்கிக் கடன்

நதி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே விவசாயிகள் வீழ்ந்து தானிருக்கிறோம். விவசாயம் நன்றாக இல்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன், விவசாயிகளை சிக்கலான நிலையில் வைத்துள்ளது. அதை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

விவசாயத்திற்கு தனி குழு

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் பாதிக்கும் விவசாயிகளை மீட்டெடுக்க, விவசாயத்துக்கென்றே தனிக் குழுவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்’ இவ்வாறு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலாவது கூட்டத்தொடரின் இரண்டாவது நாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.