ETV Bharat / state

பேனரை போல் நோட்டீஸ்கள் ஒட்டுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்!

author img

By

Published : Sep 26, 2019, 7:12 PM IST

ஈரோடு: ப்ளக்ஸ் பேனர்போல் நோட்டீஸ், போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞரணியின் 11ஆவது செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மிக விரைவாக அரசு நிறைவேற்ற வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவை. நாங்குநேரி, விக்கிரவாண்டி ப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்’ என்றார்.

இதையும் படிக்கலாமே: இடைத்தேர்தலின்போது பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படும்!

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.26

பேனரை போன்று நோட்டீசுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்!

பிளக்ஸ் பேனருக்கு தடை விதிக்கப்பட்டது போன்று நோட்டீஸ் ஒட்டுவதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Body:தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இளைஞரணியின் 11 வது செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது;

தொடர்ந்து சுணக்கமான இடங்களில் கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எதிர்கட்சிகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும். தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மேலும் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் சாயகழிவு கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

ஈரோடு பகுதியில் நடைபெற்றுவரும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் கீழடியில் மத்திய அருங்காட்சியகம் அமைக்க முன்வர வேண்டும் என்றார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் கல்வித்துறையில் ஜாதி,மதம் போன்றவற்றை கட்டாயபடுத்த கூடாது. புதிய கல்வி கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவை என்று தெரிவித்தார்.

மேலும் உலக அளவில் பொருளாதார சுணக்கம் உள்ளது. இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாங்குநேரி, விக்ரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

Conclusion:பிளக்ஸ் பேனரைபோல நோட்டீஸ் ஒட்டுவதற்கும் கட்டுபாடுகளை அரசு விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.