ETV Bharat / state

கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்க விவசாயிகள் கோரிக்கை! - Erode farmers demand leopard capture

ஈரோடு: தாளவாடி அருகே கல்குவாரியில் குட்டிகளுடன் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க வலியுறித்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

leopard capture
leopard capture
author img

By

Published : Dec 13, 2019, 1:38 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியில் ஆசனூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் தொட்டகாஜனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை முக்கிய தொழிலாக உள்ளது. வனத்தையொட்டியுள்ள இந்த கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தில் கட்டியிருந்த நான்கு ஆடுகள், எட்டு காவல் நாய்களை சிறுத்தை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பீம்ராஜ்நகரைச் சேர்ந்த விவசாயி மணி என்பவரின் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறுத்தை புகுந்து, ஆட்டைக் கடித்துள்ளது.

அப்போது, அருகிலிருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு மணி மாட்டுக் கொட்டகைக்கு வந்து பார்த்தார். அப்போது, அங்கு கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது தெரியவந்தது. இதற்கிடையே, மணிக்கு பயந்து ஆட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு அருகில் உள்ள கல் குவாரிக்குள் சிறுத்தை தப்பியோடியது.

இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் அங்கு பதிவான கால்தடயத்தை வைத்து ஆய்வு செய்ததில், சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றதை உறுதி செய்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த 3 மாதமாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் விவசாயிகள் சில மாதங்களாக சிறுத்தையை குட்டிகளுடன் இருப்பதை நேரில் பார்த்தாகவும் கூறினர்.

சிறுத்தை பதுங்கியிருப்பதாக கூறப்படும் கல்குவாரி

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருவதாகவும் மனிதர்களைக் கண்டால் குவாரியில் உள்ள கல்குவாரிகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதாகவும் தெரிவித்தனர். தற்போது சிறுத்தை இருப்பது உறுதி செய்தும் குட்டிகளுடன் இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்காமல் வனத்துறை அலட்சியமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அசம்பாவிதம் நடக்கும் முன் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் ரத்த வேட்டை நடத்திய சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு!

Intro:Body:tn_erd_02_sathy_leopard_attack_vis_tn10009

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலி:
கல்குவாரியில் குட்டிகளுடன் சிறுத்தை பதுங்கி இருப்பதாக கிராமமக்கள் புகார்

ஈரோடு மாவட்டம் ஆசனூர் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதியில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி பீம்ராஜ்நகர், சூசைபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வனத்தையொட்டியுள்ள இந்த கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தில் கட்டியிருந்த 4 ஆடுகள் மற்றும் 8 காவல் நாய்களை சிறுத்தை வேட்டையாடியது. இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பீம்ராஜ்நகரைச் சேர்ந்த விவசாயி மணி என்பவர் தோட்டத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் சிறுத்தை புகுந்து ஆட்டை கடித்தது. சிறுத்தையை பார்த்த ஆடுகள் மிரட்டியுடன் சப்தம்போட்டுக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடின. ஆடுகளின் அலறல் கேட்டு விவசாயி மணி மாட்டுக்கொட்டகைக்கு வந்து பார்த்தபோது அங்கு கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுத்தையை பார்த்து விவசாயி சப்தம் போடவே சிறுத்தை பயந்து ஆட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு அருகில் உள்ள கல் குவாரிக்குள் தப்பியோடியது. இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் அங்கு பதிவான கால்தடயத்தை வைத்து ஆயவு செய்ததில் சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது உறுதி செய்தனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் கடந்த 3 மாதமாக சிறுத்தை நடமாட்டம்இருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் விவசாயிகள் சில மாதங்களாக சிறுத்தையை குட்டிகளுடன் இருப்பதை நேரில் பார்த்து உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நாய்கள் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருவதாகவும் மனிதர்களை கண்டால் குவாரில் உள்ள கல்குவாரிகளுக்குள் சென்று பதுங்கி கொள்ளவதாகவும் தெரிவித்தனர். சிறுத்தை இருப்பது உறுதி செய்தும் குட்டிகளுடன் இருக்கும் சிறுத்தையை கூண்டு வைக்காமல் பிடிக்காமல் அலட்சியமாக வனத்துறை செயல்படுவதால் பொதுமக்களிடம் குற்றச்சாட்டுகின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நஷ்டஈடுவழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.