ETV Bharat / state

அரசுப் பேருந்தை காட்டு யானைகள் துரத்தியதால் பயணிகள் அச்சம்!

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து தாளவாடிக்குச் செல்லும் சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானைகள் துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

யானைகள் பிளிறியபடி பஸ்சை நோக்கி ஓடிவந்தன.
author img

By

Published : Jul 20, 2019, 10:28 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தாளவாடியில் இருந்து நெய்தாளபுரம் வழியாக கோடிபுரத்துக்கு 5 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள கோடிபுரத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது தாளவாடியை நோக்கி சென்றபோது, நெய்தாளபுரம் பகுதியில் சாலையோரம் 6க்கும் மேற்பட்ட யானைகள் நின்றிருந்தன. இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.

thratening
அரசுப் பேருந்தை காட்டு யானைகள் துரத்திய படம்.

பின்னர், இரண்டு யானைகள் பேருந்தை நோக்கி ஓடிவந்ததால், பயணிகள் அலறினர். இருப்பினும் அந்த யானைகள் தொடர்ந்து பேருந்தை துரத்தியத்தை, பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. நடுரோட்டில் யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெய்தாளபுரம் என்ற இடத்தில் சாலையோரம் 6க்கும் மேற்பட்ட யானைகள் நின்று கொண்டிருந்தன.

Intro:Body:tn_erd_01_sathy_elephant_chassing_tn10009

தாளவாடி அருகே அரசு பேருந்தை துரத்திய காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோடிபுரத்தில் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் நெய்தாளபுரம் என்ற இடத்தில் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் கோடிபுரம் அமைந்துள்ளது. தாளவாடி இருந்து நெய்தாளபுரம் வழியாக கோடிபுரத்து 5 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோடிபுரத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்து பல்வேறு கிராமங்களில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. நெய்தாளபுரம் என்ற இடத்தில் சாலையோரம் 6 க்கும் மேற்பட்ட யானைகள் நின்று கொண்டிருந்தன. யானைகளை பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். யானை கூட்டத்தில் இருந்த வந்த இரு யானைகள் பேருந்தை பார்த்து ஆத்திரமடைந்தன. திடீரென அந்த யானைகள் பிளிறியபடி பஸ்சை நோக்கி ஓடிவந்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். ஆனாலும் அந்த யானைகளும் பஸ்சை துரத்தியது. இதனை பேருந்து பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும் பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதியமடைந்தனர். நடுரோட்டில் பஸ்சை யானைகள் வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.