ஈரோடு மாவட்டம், பவானி சாகர் சட்டப்பேரவைத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கார்த்திக் குமார் என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சத்தியமங்கலத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று (மார்ச்.19) பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையில் கமல் கூறியதாவது, “மக்களின் கஷ்டத்தை தீர்க்க தான் அரசியலுக்கு வந்துள்ளேன். வறுமைக்கோடு என்பது அரசியல்வாதிகள் போட்ட கோடு. வறுமை என்பதே இல்லாவிட்டால் எப்படி வறுமைக்கோடு இருக்கும்? நாங்கள் வறுமைக்கோட்டை போக்குவோம். ஊழலை ஒழிக்க, மற்றொரு ஊழல் ஆட்சிக்கு உதவுவது தவறு. ஊழலை ஒழிக்க மாற்றத்தை தர எங்களை ஆதரியுங்கள். பவானி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மல்லி விவசாயிகளுக்கு வாசனைதிரவியம் ஆலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். திம்பம் மலைப்பாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏப்ரல் 6ஆம் தேதி மிக முக்கியமான நாள். நீங்கள் நினைத்தால் தலைகீழாக ஆட்சியை மாற்ற முடியும். அரசிடம் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். இரண்டு மாதங்களுக்கு முன்பு மகளிருக்கு மாதாந்திர நிதி அளிப்போம் என்ற வாக்குறுதியை நாங்கள்தான் அளித்தோம். இதை பிற கட்சிகள் காப்பி அடித்து விட்டனர்” என்றார்.
இதையும் படிங்க: கமலை கலாய்த்த வானதி சீனிவாசன்