ETV Bharat / state

சூதாட்டத்தில் சொத்தை இழந்தவர் தற்கொலைக்கு முயற்சி! - கைக்கோளன் தோட்டம் பகுதியில் சூதாட்டத்தில் சொத்தை இழந்தவர் தற்கொலைக்கு முயற்சி

ஈரோடு: கைக்கோளன் தோட்டம் பகுதியில் சூதாட்டங்களினால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, சொத்துகள் இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மோகனவேலன்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மோகனவேலன்
author img

By

Published : Jan 5, 2020, 2:22 PM IST

ஈரோடு மாவட்டம் கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திவந்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்திவரும் எல்.எம். மாதேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம்கொண்ட மோகனவேலன், 24 மணி நேரமும் அனைத்து வகை சூதாட்டங்களையும் விளையாடி வந்துள்ளார். இதன் காரணமாக தனது முதலீடு, நகை, ரொக்கப்பணம்,சொத்து ஆகியவற்றை இழந்துள்ளார். பின்னர், அபுதாபியில் ஓட்டுநராக சில மாதங்கள் பணியாற்றிவிட்டு, சொந்த ஊரான ஈரோட்டிற்குத் திரும்பியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மோகனவேலன்

மீண்டும் அவரை அணுகிய மாது, சூதாட்ட ஆசையை தூண்டிவிட அபிதாபியில் ஈட்டிய வருவாயையும் சூதாடி இழந்துள்ளார். இதனால், சூதாட்ட பேராசையில் தனது சொத்தை இழந்து தான் ஈட்டிய வருவாயையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்றிரவு தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மயக்கமான நிலையிலிருந்த மோகனவேலனை, அவரது நண்பர்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகனவேலன், "ஈரோட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூதாட்ட கிளப்பினால் என்னைப் போன்றவர்கள் பலர் குடும்பங்களை இழந்தும் உறவுகளை இழந்தும் சொத்துக்களை இழந்தும் தவித்துவருகின்றனர். ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி ஆகியவற்றை தடைசெய்திட வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய மோகனவேலன்

தடைசெய்வதுடன் சூதாட்ட கிளப் வைத்து நடத்திவரும் மாதேஸ்வரனையும் அவரைப்போல் பல இடங்களில் சூதாட்டம் நடத்திவரும் அனைவரையும் கைதுசெய்திட வேண்டும். தடைசெய்யப்பட்ட சூதாட்டங்களை ஈரோட்டில் தொடர்ந்து நடத்திவருபவரை கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சூதாட்டம் நடத்திய தலைமை காவலர் கைது.!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன05

சூதாட்ட பழக்கத்தால் தற்கொலைக்கு முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோட்டைச் சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளர் ஒரு நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களினால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, சொத்து அழிந்து போனதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதிநிறுவனமொன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு ஈரோட்டில் ஒரு நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட் மற்றும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்தி வரும் மாது என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்ட மோகனவேலன் 24 மணி நேரமும் அனைத்து வகை சூதாட்டங்களையும் விளையாடி வந்துள்ளார். இதன் காரணமாக தனது முதலீடு, நகை, ரொக்கப்பணம்,சொத்து ஆகியவற்றை இழந்த அவர் அபிதாபியில் ஓட்டுநராக சில மாதங்கள் பணியாற்றி விட்டு ஈரோடு திரும்பியுள்ளார்.

மீண்டும் அவரை அணுகிய மாது சூதாட்ட ஆசையை மீண்டும் தூண்டி விட அபிதாபியில் ஈட்டிய வருவாயையும் இழந்துள்ளார். இதனால் சூதாட்ட பேராசையில் தனது சொத்தை இழந்து தான் ஈட்டிய வருவாயையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகிய மோகனவேலன் நேற்றிரவு தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

ஆனால் மயக்கமான நிலையிலிருந்த அவரை நண்பர்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார். Body:இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தினால் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மோகனவேலன் ஈரோட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூதாட்ட கிளப்பினால் தன்னைப் போன்றவர்கள் பலர் குடும்பங்களை இழந்தும், உறவுகளை இழந்தும், சொத்துக்களை இழந்தும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் 1 நெம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட் மற்றும் ஆன்லைன் ரம்மி ஆகியவற்றை தடை செய்திட வேண்டும் என்றும், தடை செய்வதுடன் சூதாட்ட கிளப் வைத்து நடத்தி வரும் மாதுவையும் கைது செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Conclusion:மேலும் தடை செய்யப்பட்ட சூதாட்டங்களை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தி வருபவரை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேட்டி : மோகனவேலன்,ஈரோடு – தற்கொலைக்கு முயற்சித்தவர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.