ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அந்த மலைப்பாதை தமிழ்நாட்டையும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். அந்தச் சாலையில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிக்கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்கின்றன.
இந்த நிலையில் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற சரக்கு லாரி ஒன்று 21ஆவது வளைவில் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. நல்வாய்ப்பாக லாரியை ஓட்டிவந்த பழனிச்சாமி குதித்து உயிர் தப்பினார்.
அதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து காவல் துறையினர் மீட்பு வாகனத்தை வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் சீரகம் ஏற்றி வந்த லாரி விபத்து - ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்பு!