ETV Bharat / state

ஆசனூரில் திடீர் மழை: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : Apr 9, 2021, 8:42 PM IST

ஈரோடு: ஆசனூரில் திடீர் மழை பெய்ததால், மலைக் கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்சி அடைந்தனர்.

ஆசனூரில் திடீர் மழை
ஆசனூரில் திடீர் மழை: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை மற்றும் மான்கள் உள்ளன. கோடை வெப்பம் காரணமாக வனத்தில் வறட்சி நிலவுவதால், வனக்குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

மரம் செடி கொடிகள் காய்ந்து சருகாகி போனது. தண்ணீர் தேடி யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயருகின்றன. இந்நிலையில் ஆசனூரில் திடீர் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொட்டி தீர்த்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதமாக காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வனத்தில் பெய்த மழையால், குளிர்ச்சி நிலவுவதால், வனவிலங்குகளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என வனஆர்வலர்கள் தெரிவித்தனர். நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியாக பயணித்தனர்.

இதையும் படிங்க: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.