ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் திடீர் கனமழை - The vehicles drove at a moderate speed with their headlights on

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தில் திடீர் கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது

author img

By

Published : Jul 26, 2022, 10:20 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 26) காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மித வேகத்தில் சென்றன.

கனமழை

சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பெய்த மழை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த விவசாய பயிர்களுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:திருவள்ளூர் மாணவியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்:கிடைத்தது பிரேதப்பரிசோதனை முடிவு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.