ETV Bharat / state

மறைந்த முன்னாள் எம்எல்ஏவின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின் - ex mla vengidu

கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஜி.பி. வெங்கிடுவின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

condolences to former MLA vengidu
மறைந்த முன்னாள் எம்எல்ஏவின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Dec 4, 2020, 10:21 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 1996ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜி.பி. வெங்கிடு கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி, வெங்கிடுவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்த நிலையில், இன்று மு.க. ஸ்டாலின் வெங்கிடுவின் இல்லத்தில் வைத்து அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மறைந்த முன்னாள் எம்எல்ஏவின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்

மேலும், வெங்கிடுவின் மனைவி, மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஸ்டாலின் வருகையை அறிந்த திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர்கள் வெங்கிடுவின் இல்லத்திற்கு முன்பு கூடியதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தல் பதில் சொல்லும் - எம்பி கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.