ஈரோடு: சிவகிரி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(22), இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. அதேபோல் 19 வயது இளைஞர் மணிகண்டன். அருண்குமார் மற்றும் மணிகண்டன் இருவரும் தாமரபாளையம் பகுதியில் இருந்து சிவகிரி சாலையில் உள்ள கோட்டை காட்டு வலசு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயம் ஏற்பட்ட அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக கொடுமுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததுடன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் இருந்ததே உயிரிழப்புக்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.