ETV Bharat / state

காலத்தால் நலிவடையும் செருப்புத் தைக்கும் தொழில்! - தொழிலளா் தினம்

ஈரோடு: நவீனகால காலணிகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டதால் செருப்புத் தைக்கும் தொழிலை கைவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தொழிலாளியின் அவல நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு
author img

By

Published : May 1, 2019, 1:29 PM IST

உழைப்பே உயர்வு தரும் என்ற வாசகங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் தங்களின் உழைப்புத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காக வருடந்தோறும் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நவீன கால மாற்றங்களால் இரண்டு தலைமுறைகளாக செய்துவந்த தொழிலை கைவிடும் சூழ்நிலைக்கு ஒரு கூலித் தொழிலாளி தள்ளப்பட்டுள்ளார்.

ஈரோடு ராஜாஜி புறத்தைச் சேர்ந்தவர் சேமலை. இவர் அவருடைய தாத்தா காலத்தில் இருந்து தோலால் செய்யப்பட்ட காலணிகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நவீன காலத்தில் நாகரிக மாற்றம் என்ற பெயரில் காலணிகள் அணிவதில் வந்த பல்வேறு மாற்றங்களால் இவரது தொழில் நலிவடைந்ததுள்ளது.

செருப்பு தைக்கும் தொழிலாளி - சேமலை

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த தொழிலை சிறு வயது முதல் நான் செய்து வருகின்றேன். ஆரம்ப காலகட்டத்தில் காதி கிராப்ட் கடைகளுக்கு எருமை தோலால் செய்யப்பட்ட காலணிகளை விற்பனை செய்து வந்தேன். அரசு தரப்பிலிருந்து வரக்கூடிய பணம் கால தாமதமாக வந்ததால் சரிவர தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. பின் செருப்புகளை தைக்கும் தொழில் தொழிலுக்கு மாற்றிக்கொண்டேன்.

இப்போது இந்த தொழிலுக்கும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. காரணம் காலனிகளில் புதுமை புகுத்துவதாக கூறி உடலுக்கு தீங்கான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட குறைந்த விலை கொண்ட காலணிகள் அதிகளவில் வரத் தொடங்கியது. மக்கள் யாரும் ஒரு முறை வாங்கிய காலணிகள் தேய்ந்தாலோ அல்லது அறுந்தாலோ அவற்றை சரி செய்ய வருவது இல்லை.

இந்த தொழிலில் நாளொன்றுக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வருமானம் கிடைப்பது மிகச் சிரமமாக இருக்கிறது. புதிதாக வாங்கும் காலணிகளுக்கு கடைகளில் மக்கள் பேரம் பேசாமல் செருப்பை மறுசீரமைப்பு செய்த வேலைக்கு தகுந்த பணத்தை கொடுக்க மறுப்பது வேதனையாக இருக்கிறது.

எருமை தோலால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதன் மூலம் உடல் குளிர்ச்சி உற்று ரத்த நாளங்கள் சீராக இருக்கும். பிளாஸ்டிக் மற்றும் இதர மூலப்பொருட்களால் செய்யப்பட்ட காலணிகளை பயன்படுத்துவதால் உடல் உஷ்ணமாகி பாதத்தில் பாதிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

எங்களைப்போன்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழக அரசு நாங்கள் தயாரிக்கும் தோலால் செய்யப்பட்ட காலணிகளை வாங்க ஊக்கப்படுத்துவதுடன், அவற்றை அதிகளவில் கொள்முதல் செய்யவும் முன்வரவேண்டும்” என்றார்.

ஈரோடு 30.04.2019 
சதாசிவம்
மே தின செய்தி தொகுப்பு:

செருப்பு தைக்கும் தொழிலாளி பற்றிய செய்தி தொகுப்பு

நவீனகால காலணிகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டதால் செருப்பு தைக்கும் தொழிலை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தொழிலாளி பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.... 

உழைப்பே உயர்வு தரும் என்ற வாசகங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் தங்களின் உழைப்பு திறனையும் வெளிப்படுத்தி வருகின்றன அவர்களுக்காக வருடந்தோறும் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த தினத்தில் நவீன கால மாற்றங்களால் இரண்டு தலைமுறைகளாக செய்துவந்த தொழிலை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு கூலித் தொழிலாளி ஒருவர்.ஈரோடு ராஜாஜி புறத்தை சேர்ந்தவர் சேமலை இவருக்கு ஒரு மனைவி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர் தனது தாத்தா காலத்தில் இருந்து தோலால் செய்யப்பட்ட காலணிகளை விற்பனை செய்து வந்துள்ளனர் இந்நிலையில் இவருடைய காலத்தில் நாகரிக மாற்றம் என்ற பெயரில் காலணிகள் அணிவதில் வந்த பல்வேறு மாற்றங்களால் இவரது தொழில் நலிவடைந்தது இதுபற்றி அவரே கூறுகையில்: நான் இந்த தொழிலில் சிறு வயது முதல் செய்து வருகின்றேன் ஆரம்ப காலகட்டத்தில் அரசுத்துறையில் ஒன்றான காதி கிராப்ட் கடைகளுக்கு எருமை தோழர் செய்யப்பட்ட காலணிகளை விற்பனை செய்து வந்தேன் ஒரு கட்டத்தில் அரசுத் தரப்பிலிருந்து வரக்கூடிய பணம் கால தாமதமாக வந்ததால் சரிவர தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் தவித்தேன் பிறகு செருப்புகளை தைக்கும் தொழில் தொழிலுக்கு மாற்றிக்கொண்டு ஆனால்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று தற்போது வருமானம் இல்லை என கவலையுடன் கூறினார். இதற்கு காரணம் காலனிகளில் புதுமை புகுத்துவதாக கூறி உடலுக்கு தீங்கான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட குறைந்த விலை கொண்ட காலணிகள் அதிகளவில் வரத் தொடங்கியதால் மக்கள் யாரும் ஒரு முறை வாங்கிய காலணிகளில் தேய்ந்தாலோ அல்லது அறுந்தாலும் அவற்றை சரி செய்ய முன்வராததால். இந்த தொழிலில் நாளொன்றுக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வருமானம் கிடைப்பது மிகச் சிரமமாக இருப்பதாக கூறினார். இவ்வாறு இருக்கக் கூடிய சூழ்நிலையில் வரும் வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கும் காலணிகளுக்கு கடைகளில் பேரம் பேசாமல் தான் செருப்பை மறுசீரமைப்பு செய்த வேலைக்கு தகுந்த பணத்தை கொடுக்க மறுப்பது வேதனையாக இருப்பதாக கூறினார். எருமை தோலால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதன் மூலம் உடல் குளிர்ச்சி உற்று ரத்த நாளங்கள் சீராக இருக்கும் என்று கூறிய அவர் பிளாஸ்டிக் மற்றும் இதர மூலப்பொருட்களால் செய்யப்பட்ட காலணிகளை பயன்படுத்துவதால்  உடல் உஷ்ணமாகி பாதத்தில்  பாதிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறினார் இதனை மக்கள் அறிந்து  எருமை தோலால் செய்யப்பட்ட காலனிக்கு தங்களை  மாற்றிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். எங்களைப்போன்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழக அரசு தாங்கள் தயாரிக்கும் தோல்லால் ஆனா காலணிகளை ஊக்கப்படுத்துவதுடன், அவற்றை அதிகளவில் கொள்முதல் செய்ய முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்தார்... 

பேட்டி:சேமலை கூலித் தொழிலாளி

Visual send mojo app

File name:TN_ERD_03_30_LABOUR_MAY_DAY_PKG_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.