ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அரசு ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓரிரு மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
கரோனா பேரிடரில் பணியாற்றிய பவானிசாகர் பேரூராட்சியைச் சேர்ந்த ஐந்து பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பள்ளி தேசிய கொடியை தூய்மைப் பணியாளர் சரவணன் ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர், ஒட்டு மொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் கவுரவத்தை அளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தான் பயின்ற பள்ளியில் கொடி ஏற்றிய பூரண சுந்தரி ஐஏஎஸ்!