ஈரோடு சத்தியமங்கலம் வரசித்தி விநாயகர் கோவில் அருகில் பவானி ஆற்றங்கரையில் துணிகள், குப்பைகள் தேங்கி நீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டது. ஆற்றில் 200 கனஅடி நீர் மட்டுமே ஓடுவதால், நீரின் அளவை விட மாசுபட்ட நீர் அதிகமாக காணப்பட்டது.
இதனை சுத்தம் செய்ய திருப்பூர் பிசிடி சமூக ஆர்வலர்கள் முன்வந்தனர். இதற்கான நிகழ்ச்சி சத்தியமங்கலம் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் ஆற்றில் இறங்கி சுமார் 2 டன் துணி குப்பைகளை சுத்தம் செய்தனர். இவர்களுக்கு உதவியாக பொதுமக்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வருகிற நாள்களில் சமூக ஆர்வலர்கள் அதிக பேர் பங்கேற்று ஆற்றங்கரை முழுவதும் சுத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காற்று மாசில் மூச்சுத் திணறும் இந்திய நகரங்கள்