ETV Bharat / state

கிறிஸ்துவர்களுக்கு  பூங்கொத்து - சகோதரத்துவம் போற்றிய இஸ்லாமியர்கள்!

ஈரோடு: இலங்கை குண்டுவெடிப்பு வருத்தம் தெரிவித்து கிறிஸ்துவர்கள் - இஸ்லாமியர்கள் இடையேயான சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கிறிஸ்துவர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து இஸ்லாமியர்கள் மதநல்லிணக்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு
author img

By

Published : May 5, 2019, 5:18 PM IST

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, சத்தியமங்கலம் ஜமாத் கண்டனம் தெரிவித்தோடு கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மதநல்லிணக்கம், சகோதரத்துவம் தொடர வேண்டும் என இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சத்தியமங்கலம் புனித அருளானந்தர் தேவலாயத்துக்கு சென்றனர். அங்கு தேவாலயத்தில் நடந்த மதநல்லிணக்க அமைதி பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

கிறிஸ்துவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சகோதரத்துவத்தை வலியுறுத்திய இஸ்லாமியர்கள்

பின்னர் பாதிரியார் பிரான்ஸிசிடம் ஜமாத் தலைவர் பூங்கொடுத்து கொடுத்து குண்டு வெடிப்பில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் குண்டுவெடிப்புக்கு வருத்தம் தெரிவித்தும் சகோதரத்துவத்தை போற்றினார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களிடம் இஸ்லாமியர்கள் பூங்கொத்து கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனைத்து மதங்களில் தீவிரவாதம் இல்லையென்றும் மதக்கோட்பாட்டை கடைபிடிக்காத தீவிரவாதிகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், கிறிஸ்துவர், இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே கண்ணியம், ஒற்றுமை தொடர ஒத்துழைப்போம் என இந்த நிகழ்வின்போது உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு:

சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலயத்தில் கிறிஸ்துவர்களுக்கு  பூங்கொத்து கொடுத்து சகோதரத்துவத்தை வலியுறுத்திய இஸ்லாமியர்கள்

TN_ERD_SATHY_01_05_CHURCH_MUSLIM_VIS_TN10009

(Visual  FTP இல் உள்ளது)

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

05.05.2019

இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புக்கு வருத்தம் தெரிவித்தும் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்களிடையே ஒற்றுமை தொடரவேண்டும் என சத்தியமங்கலம் ஜாமத் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து புனித அருளானந்தர் தேவலாயத்தில் கிறிஸ்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி சகோதரத்துவத்தை வலியுறுத்தினர்.

இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு முஸ்லீம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக அறிவித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சத்தியமங்கலம் ஜமாத் கண்டனம் தெரிவித்தோடு கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மதநல்லிணக்கம் சகோதரத்துவம் தொடர வேண்டும் என இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சத்தியமங்கலம் புனித அருளானந்தர் தேவலாயத்துக்கு சென்றனர். அங்கு தேவாலயத்தில் நடந்த மதநல்லிணக்க அமைதி பிராத்தனையில் பங்கேற்றனர். அப்போது ஆலய பங்குத்தந்தை பிரான்ஸிசிடம் ஜமாத் தலைவர் பூங்கொடுத்து வழங்கி குண்டு வெடிப்பில் இறந்த கிறிஸ்துவர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் குண்டுவெடிப்புக்கு வருத்தம் தெரிவித்தும் சகோதரத்துவத்தை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களிடம் இஸ்லாமியர்கள் பூங்கொத்து கொடுத்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தினர். அனைத்து மதங்களில் தீவிரவாதம் இல்லையென்றும் மதக்கோட்பாட்டை கடைபிடிக்காத தீவிரவாதிகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கிறிஸ்துவர்,இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே கண்ணியம், ஒற்றுமை தொடர ஒத்துழைப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.