ETV Bharat / state

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! - பாலியல் தொந்தரவு

ஈரோடு: ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
author img

By

Published : May 11, 2021, 12:23 PM IST

ஈரோடு கலைமகள் வீதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(59), எண்ணெய் கடை ஊழியர். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ல் ஆறு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிந்து கோடீஸ்வரனைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கோடீஸ்வரன் பிணையில் வெளியே வந்தார். இவர் மீதான வழக்கு நேற்று (மே.10) ஈரோடு மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி மாலதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுமதி ஆஜரானார்.

விசாரணையில், வழக்கில் தொடர்புடைய கோடீஸ்வரனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ. 35 ஆயிரம் வழங்கத் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்தார். தீர்ப்புக்கு பின்னர் குற்றவாளி கோடீஸ்வரன், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ’தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிட வேண்டாம்’ - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.