ஈரோடு மாவட்டம் கார்ணபாளையத்திலிருந்து கரூர் மாவட்டம் நெரூர்வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு புகளூரான் ராஜ வாய்க்கால் பயன்பட்டுவருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் கழிவுநீரை இந்த வாய்க்காலில் இரவு நேரத்தில் திறந்துவிடுகின்றது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றத்துடன் செல்கிறது.
இந்தப் பாசன வாய்க்காலை பயன்படுத்தும் விவசாயிகள் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு காகித நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டினார்கள். மேலும், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.