ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வருகை தந்தார்.
அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”எல்லோரும் எல்லா சிறப்புகளும் பெறுவதற்கு கல்வி ஒன்றால் மட்டும்தான் முடியும். அதை நிறைவேற்றுகின்ற அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
வருகின்ற கல்வியாண்டு முதல் பள்ளியில் வழங்கப்படும் காலனிகளுக்கு பதிலாக ஷூ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் உதவியுடன் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அட்டர் டிங்கர் லேப் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.
அதே போல் பள்ளிக் கல்வித் துறையில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் சுற்றுச்சுவர்கள் கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணிகளை நிறைவேற்ற கருணை உள்ளம் படைத்தவர்கள் நிதி உதவி செய்ய முன் வரவேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
2013 மற்றும் 2014ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு எழுதி பணிக்காக 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதில் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும்.
கடம்பூர் கிராமத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டு உள்ள தொண்டை அடைப்பான் நோய்க்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு நடந்துவருகிறது. குடிநீர் உணவு சுகாதாரம் ஆகியற்றை ஆய்வு செய்து குழந்தை எவ்வாறு கடைப்பிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நீட்தேர்வை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு வேண்டும் என்பதை அரசின் அழுத்தமான கொள்கை முடிவாக வலியுறுத்திவருகிறோம்.
விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு ஆரம்பப்பள்ளி அமைக்க முதலில் சாலைகள் அமைக்கப்படும் அதன் பிறகு பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.