ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகவில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கின்றன.
அதிக நீளம் மற்றும் அதிக பாரம் கொண்ட லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் 12 சக்கர லாரிகள் வரை மட்டுமே திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகிறது. மலைப்பாதையில் 14 சக்கர லாரிகள் தடை செய்யப்பட்டள்ள நிலையில் கர்நாடகாவிலிருந்து கேபிள் வயர் பாரம் ஏற்றிய 14 சக்கரம் லாரி திம்பம் மலைப்பாதை வழியாக பண்ணாரி சோதனைச்சாவடி வந்தது.
அப்போது வனச்சோதனைச்சாவடியில் இருந்த ஊழியர்கள் 14 சக்கர லாரியை நிறுத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோபி கோட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிவேலு திம்பம் மலைப்பாதையில் அனுமதியின்றி வந்ததாக லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:லாரி மீது பைக் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு!