ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(45). இவர் பசு மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் விவசாய நிலத்தையொட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை, ரங்கசாமியின் ஆடுகளை அடித்துக் கொன்றது.
இதனால் அப்பகுதி மக்கள் தோட்டத்தில் விவசாயப்பணிகள் மேற்கொள்ள அச்சம் கொண்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சிறுத்தையை பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குனர் குமிளி வெங்கட நாயுடு, தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாழை மற்றும் மஞ்சள் காடுகளில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது.
மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க விவசாய தோட்டங்களிலும் அதன் கால்தடம் பதிவான இடத்திலும் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.