சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்கள் குறித்த திரைப்படங்கள் சத்தியமங்கலத்தில் மாணவ, மாணவியர்களுக்காக ஒளிபரப்பப்பட்டது.
'கீ ஸ்டோன்' தொண்டு நிறுவனம் டபிள்யூ. டபிள்யூ. எஃப். (WWF) என்ற உலகளாவிய தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு நாட்கள் ''இயற்கையும் நானும்'' என்ற தலைப்பில் திரைப்பட விழா நடத்தப்பட்டது.
இதில், சத்தியமங்கலம், தாளவாடியைச் சேர்ந்த 9 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் வனப்பாதுகாப்பு, கடலுக்கு அடியில் வாழும் விலங்குகள், பவளப்பாறைகள் குறித்த திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இத்தகைய படங்களைப் பார்த்த மாணவ - மாணவிகள் கடல் குறித்த பல்வேறு அரிய பல தகவல்களை தெரிந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 100 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்!