ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஹயர் கூட்ஸ் அசோசேசன் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது, "ஏற்கனவே 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 16 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் பெற்றோர்கள்தான். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ரத்தாகவில்லை.
பள்ளிக்கல்வித்துறை பற்றி குறைகூறும் எதிர்கட்சியினர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?. ஜாதி கயிர் மாணவர்கள் கட்டக் கூட்டாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த ஒரு அறிக்கையும் அனுப்பப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் தான் ரேங்கிங் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. திமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரேங்கிங் முறை இல்லாததால் பல மாணவர்கள் உயிரிழந்தனர்" என்றார்.
இதையும் படிங்க: ஆண்டியப்பனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு? அமைச்சர் கே.சி.வீரமணி பதில்