ETV Bharat / state

தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஜேசிபி - jcp

ஈரோடு: சத்தியமங்கலத்தில் கூலித்தொழிலாளர்கள் ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jcp
author img

By

Published : Jun 22, 2019, 8:20 AM IST

சத்தியமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்தப் பணிக்கு வந்த பணியாளர்கள் மாலையில் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் வேலையை முடித்துவிட்டு, அங்கு பணிக்குவந்த ஜேசிபி வாகனத்தின் முன்பகுதியில் உள்ள பக்கெட்டில் ஏறி நின்றபடி பயணம் செய்தனர்.

ஜேசிபி ஓட்டுநரும் இதைப்பற்றிக் கவலைப்படாமல் வாகனத்தை நகர்ப்பகுதிக்குள் அதிவேகமாக இயக்கினார். இதைக்கண்டு, முன்னால் சென்ற வாகன ஓட்டிகளும் ஜேசிபி இயந்திரத்துக்குப் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பயந்து ஒதுங்கினர்.

ஜேசிபி மேற்கொண்ட ஆபத்தான பயணம்

அப்போது, இந்த சம்பவத்தை செல்போனில் படம் எடுப்பதை பார்த்த ஜேசிபி ஓட்டுநர், அவசர அவசரமாக அந்த தொழிலாளர்களைக் கீழே இறக்கிவிட்டார்.

இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்கள் மீது போக்குவரத்துக் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:சத்தியமங்கலம் பகுதியில் ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட கூலித்தொழிலாளர்கள்
Body:சத்தியமங்கலம் பகுதியில் ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட கூலித்தொழிலாளர்கள்

சத்தியமங்கலத்தில் கூலித்தொழிலாளர்கள் ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் சாலைப்பணிக்கு வந்த பணியாளர்கள் மாலையில் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் வேலையை முடித்து விட்டு அங்கு பணிக்கு வந்த ஜேசிபி வாகனத்தின் முன்பகுதியில் உள்ள பக்கெட்டில் ஏறி நின்றபடி பயணம் செய்தனர். ஜேசிபி ஓட்டுநரும் இதைப்பற்றி கவலைப்படாமல் வாகனத்தை நகர்ப்பகுதியில் அதிவேகமாக இயக்கினார். முன்னால் சென்ற வாகன ஓட்டிகளும் ஜேசபி இயந்திரத்துக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பயந்து ஒதுங்கினர். சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொழிலாளர்களை கண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அப்போது இந்த ஆபத்தை உணராமல் ஜேசிபி வாகனம் ஓட்டிய ஓட்டுநர் வீடியோ எடுப்பதை பார்த்துவிட்டதால் உடனடியாக அவசரமாக தொழிலாளர்களை இறங்கிவிட்டனர். காவல்துறை சார்பில் விபத்தை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றும் வரும் சூழ்நிலையில் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் ஜேசிபி இயந்திரத்தில் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்கள் மீது போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.