ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் அதிக அளவில் கரும்பு விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (ஜன.2) அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது திம்பம் மலைப்பாதையில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது லாரியில் அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த ஆசனூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவிழ்ந்த லாரியில் இருந்த கரும்பு பாரம் மற்றொரு லாரியில் ஏறறப்பட்டது.
இதையும் படிங்க:புத்தாண்டு விருந்துக்கு ஆடு திருடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!