தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றில் முதலிடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், அம்மாவட்ட ஆட்சியரின் கடும் நடவடிக்கைகள் காரணமாக பச்சை மண்டலமாக மாறியது. தற்போது வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களால் தொற்றுப் பரவல் ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 73 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்தது. இதனைக் கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மீண்டும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் முகக்கசவம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை, போக்குவரத்து துறையை சார்ந்தவர்கள் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக ஒவ்வொருவரிடமும் 100 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
அதன்படி, நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 500 பேரிடம் அபராதத் தொகை வசூலித்து சத்தியமங்கலம் நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: சம்பா பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ - நிவாரணம் கேட்கும் விவசாயிகள்