ETV Bharat / state

பழுதுபார்த்தபோது காவலரின் வயிற்றை பதம்பார்த்த துப்பாக்கி! - சத்தியமங்கலம்

ஈரோடு: துப்பாக்கியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்து ஆயுதப்படை காவலர் ஒருவரின் வயிற்றில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழுதுபார்த்த துப்பாக்கி வயிற்றை பதம்பார்த்தது!
author img

By

Published : Jul 24, 2019, 3:26 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சரகங்களில் வனக்காவலர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆயுதப்படை காவல் துறையினர் பழுதுபார்ப்பது வழக்கம்.

அதன் அடிப்படையில் துப்பாக்கியில் உள்ள பழுதுகளை நீக்கி நல்ல முறையில் இயங்கும் வகையில் சோதனை செய்யும் பணி தாளவாடி அருகே உள்ள சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஈரோடு ஆயுதப்படை காவலர் பிரேம்குமார் துப்பாக்கிகளை பழுது நீக்கும் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து அவரது வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது.

பழுதுபார்த்த துப்பாக்கி வயிற்றை பதம்பார்த்தது

இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை வனக்காவலர்கள் மீட்டு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரேம்குமார் கவலைக்கிடமாக இருப்பதால் அங்கிருந்த மருத்துவர்கள் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தாளவாடி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்
.

Intro:tn_erd_04_sathy_gun_misfire_vis_tn10009Body:SAMRAJ SATHY:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சரகங்கள் இல் வனக்காவலர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆயுதப்படை போலீசார் பழுது பார்ப்பது வழக்கம். துப்பாக்கியில் உள்ள பழுதுகளை நீக்கி நல்ல முறையில் இயங்கும் வகையில் சோதனை செய்யும் பணி தாளவாடி அருகே உள்ள சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. ஈரோடு ஆயுதப்படை காவலர் பிரேம்குமார் துப்பாக்கிகளை பழுது நீக்கும் போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து அவரது வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது இதில் பலத்த காயமடைந்த காவலர் பிரேம்குமார் மீட்டு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மைசூர் அரசு மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார் இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்

tn_erd_04_sathy_gun_misfire_vis_tn10009Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.