யானைகளின் முக்கிய வழித்தடங்களில், சத்தியமங்கலம் அடுத்துள்ள தலமலை வனப்பகுதியும் ஒன்று. இதனால், யானைகள் அடிக்கடி இப்பகுதியிலுள்ள வனச்சாலையைக் கடந்து செல்லும். அடர்ந்த காட்டுப்பகுதிக்கு நடுவே வனச்சாலை அமைந்துள்ளதால் சாலையோரம் யானைகள் முகாமிட்டு தீவனம் சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் அரசுப் பேருந்து 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மகாராஜபுரம் சாலையோரம் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானையைக் கடந்து பேருந்து சென்றபோது திடீரென யானைப் பேருந்தை வேகமாக துரத்தியது.
இதனால் பேருந்தில் இருந்தப் பயணிகள் அலறினர். ஓட்டுநர் வேகமாக பேருந்தை ஓட்டியதையடுத்து சிறிது தூரம் துரத்திவந்த யானை அங்கேயே நின்றுவிட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் யானை இருப்பது குறித்து எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: வேலூரில் எருது விடும் விழாவில் 200 எருதுகள் பங்கேற்பு