சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்துவருகின்றன. தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிகின்றன. தாளவாடி மலைப்பகுதியிலிருந்து சத்தியமங்கலத்தை நோக்கி லாரியில் கரும்பு பாரம் ஏற்றிச்செல்பவர்கள் ஆசனூர் சோதனைச் சாவடியில் அதிக உயரமுள்ள கரும்புகளை சாலைகளில் வீசி எரிந்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்தக் கரும்புகளை உண்ண யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு சாலையின் நடுவே நின்றபடி யானை ஒன்று கரும்புத்துண்டுகளை தின்றபடி வெகுநேரமாக நின்றிருந்தது. சாலையில் நின்ற காட்டுயானையைக் கண்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையில் நின்றபடி இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும், சாலைகளில் கரும்புகளை வீசிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: யானையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வன அலுவலர்கள்: காணொலி வைரல்