ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசுக்கு மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பினர் கருங்கல்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாளை முதல் ஈரோடு நகரப்பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே இயங்கும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவவசம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் கடைகளுக்கு வரவேண்டாம்” என்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறதா 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்?