ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.80 லட்சம் பறிமுதல்! - Erode District News

அந்தியூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை
தேர்தல் பறக்கும் படை
author img

By

Published : Mar 17, 2021, 12:30 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற இருப்பதால், மாவட்ட தேர்தல் அலுவலர்களின் உத்தரவின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடா நடவடிக்கையை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்தியூர் மேட்டூர் ரோட்டில் அண்ணா மடுவு என்ற இடத்தில் பறக்கும் படை அலுவலர் பழனிசாமி தலைமையில் மற்ற அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது லாரி ஓட்டுனரான கணக்கம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பவரிடம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது. மேலும் அவர், தான் வாழைக்காய் வியாபாரி என்றும், வாழைக்காய் விற்ற பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதனால் பறக்கும் படையினர் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச்செல்லுமாறு சக்திவேலிடம் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் அருகே ரூ.4.90 லட்சம் மதிப்புள்ள பட்டு புடவைகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.