ஈரோடு மாநகராட்சி 32ஆவது வார்டுக்கு உட்பட்ட வெட்டுக்காட்டுவலசு விவேகானந்தர் ரோட்டில் உள்ளது பழனியப்பன் நகர். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் சாக்கடை வசதி, ரோடு வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாக்கடை வசதி இல்லாததால் ஓவ்வொருவரின் வீட்டின் முன்பும் குழி தோண்டி சாக்கடை நீரை தேக்கி வைத்துள்ளனர். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலரக்ளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் தங்களது பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு