ETV Bharat / state

நிறுத்தி வைக்கப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் நிறுத்திவைக்கப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கியது. மின் பாதைகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்
நிறுத்தி வைக்கப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்
author img

By

Published : Jun 21, 2021, 12:13 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்ததால் கடந்த இரு மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஒரு சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

மின் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. ‘நோய்த்தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியவுடன் தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூன் 20) தொடங்கியுள்ளது.

"பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் செய்துவருகின்றனர். மின் பராமரிப்புப் பணிகளை மின்வாரிய உயர் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். பராமரிப்புப் பணி மேற்கொள்வதன் மூலம் அடிக்கடி மின்தடை ஏற்படும் நிகழ்வு குறையும்" என மின்வாரிய அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.