ETV Bharat / state

சேதமடைந்த பவானீஸ்வரர் கோயில் - விரைவில் சீரமைக்கக் கோரிக்கை

ஈரோட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த பவானீஸ்வரர் கோயிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பவானீஸ்வரர் கோயில்
பவானீஸ்வரர் கோயில்
author img

By

Published : Jul 20, 2021, 10:56 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் பிரசித்திபெற்ற பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோயிலுக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தரிசனம் செய்வது வருவது வழக்கம்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானீஸ்வரர் கோயிலின் தெற்கு பிரகார மதில் சுவர் இடிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து பிரகார சுவரும் இடிந்து சேதமடைந்தது. இதில் 63 நாயன்மார்கள் சிலைகளும் சேதமடைந்தன.

சேதமடைந்த பவானீஸ்வரர் கோயில்

இதன் காரணமாக கோயிலில் மேற்கூரை வலுவிழந்தது. இதைத்தொடர்ந்து கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது தற்காலிகமாக ஒரு சிறிய அறையில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

சேதமடைந்த பவானீஸ்வரர் கோயில்

கோயிலின் தெற்குப்புற மதில் சுவர், பிரகார சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து மூன்று ஆண்டுகளாகியும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் கோயில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இதன் காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்திலுள்ள பிரசித்திப்பெற்ற ஒரே சிவாலயமான பவானீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் விரைந்து பவானீஸ்வரர் கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மோசடியில் ஈடுபடுபவர்களிடம் ஏமாறாதீர்' - பழனி கோயில் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.