ETV Bharat / state

தள்ளுபடி மானியத்தை வழங்க கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை! - கைத்தறி நெசவாளர்கள்

ஈரோடு: கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாத்திடும் வகையில் கூடுதல் தள்ளுபடி மானியத்தை வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனம் கோரிக்கைவிடுத்துள்ளது.

நெசவாளர்கள்
நெசவாளர்கள்
author img

By

Published : Sep 30, 2020, 7:25 PM IST

கைத்தறி நெசவாளர்களின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுத் தொழில் அழியும் நிலையில் உள்ளது. கைத்தறி நெசவாளர் குடும்பங்களைத் தவிர தொழிலாகப் பாவித்துவந்தவர்கள் மாற்றுத் தொழிலைத் தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களின் தலைமை நகரங்களாக விளங்கும் ஈரோடு மாவட்டம் பவானி, சென்னிமலை, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பத்தினர் நெசவுத் தொழிலைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.

விசைத்தறிக்குப் போட்டியாகச் செயல்படாத நிலையில் நெசவாளர் குடும்பத்தினர் பலரும் மாற்றுத்தொழிலைத் தேடிச் சென்றுள்ளனர்.

இதனிடையே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்திட ஆண்டு முழுவதும் 20 விழுக்காடு தள்ளுபடி மானியத்தையும், அண்ணா பிறந்தநாள் முதல் ஜனவரி மாதம் வரை கூடுதலாக 10 விழுக்காடு தள்ளுபடி மானியத்தையும் அரசு தொடர்ந்து வழங்கி நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துவந்தது.

இந்த நிலையில் தற்போது ஆண்டு முழுவதும் வழங்கப்பட்டுவந்த தள்ளுபடி மானியத்தை நிறுத்தி நெசவுத் தொழிலை நம்பியுள்ளவர்களை வஞ்சிக்கும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.

உற்பத்திசெய்யப்படும் ஜவுளி ரகங்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நிலையைப் போக்கி உற்பத்தி செய்யப்படும். அனைத்து ஜவுளி ரகங்களையும் கொள்முதல் செய்திடவும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள தள்ளுபடி மானியத்தை வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் கைத்தறி நெசவாளர்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அழிவுநிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் நெசவுத் தொழிலைப் பாதுகாத்திடவும், அத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.